உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையம் நவீனமயம்; நகரசபை அமர்வில் ஏகமனதாக அனுமதி.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
107 பார்வைகள்

பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டங்களைப் பருத்தித்துறை நகரசபை முன்னெடுப்பதற்குச் சபை அமர்வில் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் 17 ஆவது மாதாந்த அமர்வு நேற்றுக் காலை 9.00 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில் பருத்தித்துறை நகர சபைச் செயலாளர் சந்திரசேகரம் பிரசாத், உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

பேருந்து நிலைய அபிவிருத்தித் திட்ட வரைபு கடந்த சபை அமர்வில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்காக நகர சபைக்குரிய நிதியிலிருந்து 29 மில்லியன் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகரபிதா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உடனடியாகத் தொடங்குவதற்குச் சபையின் அனுமதியைக் கோரி நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் முன்வைத்த பிரேரணைக்குச் சபை ஏகமனதாக அனுமதி வழங்கியது.

இந்தக் கூட்டத் தொடரின் போது, ஹாட்லிக் கல்லூரி விடுதி மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றைப் பயன்படுத்தும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், கல்லூரி வீதியின் ஓரத்தில் பாடசாலை வளாகம் வரை பாதுகாப்பு அமைப்புக்களுடனான நடைபாதை அமைப்பது தொடர்பில் நகர சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

சபையில் விரிவாக ஆராயப்பட்ட இந்தப் பிரேரணையை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர சபையின் ஏனைய முக்கிய தீர்மானங்கள்
சந்தைக் கடைகள் குத்தகை
நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில், ஒப்பந்த உரிமையாளர்கள் மரணித்தமை அல்லது வாரிசுகள் இன்றி உள்ள நிலைமை குறித்து ஆராயப்பட்டது. அந்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்து, தற்போது நீண்டகாலமாக அக் கடைகளைப் பயன்படுத்தி வருபவர்களுக்குப் புதிய வாடகை ஒப்பந்தங்களை வழங்கிட ஆளுநரின் அனுமதியைப் பெற முடிவு செய்யப்பட்டது.

தீயணைப்புப் பிரிவு
நகர பகுதியில் தீயணைப்புப் பிரிவு அலகு ஒன்றை நிறுவுவதற்காகத் தனியார் காணிகளைக் கொள்வனவு செய்வதற்கான முதற்கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

பொது நூலகம் – மின் இணைப்பு
பொது நூலக வாசகர் வட்டத்தில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வரையறைகளை மீளாய்வு செய்தல், பாதுகாப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி மின் இணைப்புகளை இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சீரமைத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

65 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

71 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

68 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் சிக்கினர்.!

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீல்ல பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிபிலை, தெல்கொட மற்றும்…

89 0 0