உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவை விரைவாக வழங்க வலியுறுத்தி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
136 பார்வைகள்

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவை விரைவாக வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனர்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப தொகைகள் பயனாளிகளுக்கு வைப்பில் இடப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பணம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமக்கான பணத்தை வழங்க வலியுறுத்தி டித்வா வீட்டுத்திட்ட பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது பருவமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக சிலர் தமது வாழ்ந்த தற்காலிக வீட்டினையும் உடைத்து நிரந்தர வீடும் இன்றி தற்பொழுது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் தமக்கான மிகுதி கொடுப்பனவை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தாக தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவை மிக விரைவாக எதிர்வரும் வாரத்தில் மீள வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின்போது, அங்கு வந்த நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்க – ஆளுநர் பணிப்புரை!

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின்…

74 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

74 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

68 0 0