உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேலில் நெதன்யாகுவை வெளியேற்றும் போராட்டங்கள் தீவிரம்!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
89 பார்வைகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில், நெதன்யாகுவின் கூட்டணி 120 இடங்களில் 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சிகள் 67 இடங்களுடன் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரபுச் சமூகக் கட்சிகளுடன் இணைந்து யூத-அரபு கூட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘ஸ்டாண்டிங் டுகெதர்’ (Standing Together) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டங்கள் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா, பீர்ஷேபா மற்றும் தய்பே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரபுச் சமூகக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைக்குமாறு காடி ஐசென்காட், நாஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லேபிட் ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

புளோரிடாவில் வணிகப் பயன்பாட்டு வானூர்தி விபத்து: 9 பேர் பரிதாபமாக ப@லி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வணிகப் பயன்பாட்டு ஜெட் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

83 0 0
உலக செய்திகள்

புடின் ஒரு நிஜ வாழ்க்கை வில்லன் – ஸ்டீபன் ஹார்பர் விமர்சனம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகவும் புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளி என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் என்றும், “உண்மையிலேயே தீயவர்” (Truly Evil) என்றும்…

80 0 0
உலக செய்திகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப்…

106 0 0
உலக செய்திகள்

செய்தியாளரை உருவக்கேலி செய்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை ‘அருவருப்பானவர்’ எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…

115 0 0