உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நவம்பர் 12 இல் அநுரவின் ‘பட்ஜட்’

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
92 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, நிதி அமைச்சரான ஜனாதிபதி நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவு – செலவுத் திட்ட உரை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு – செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்குக் குழுநிலை விவாதம் இடம்பெறும். இறுதியாக, டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரச விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்குக் கூடி வரவு – செலவுத் திட்ட விவாதங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவாதங்களின் போது நேரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தின் போது ஆளுங்கட்சிக்கு 60 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் நேரம் ஒதுக்கப்படும். அதேவேளை, குழுநிலை விவாதக் காலத்தில் ஆளுங்கட்சிக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் நேர ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி; அரசுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை.!

தம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குச் சட்ட ரீதியாகப் பதிலடி கொடுக்கப் போவதாகப் பிவிதுரு ஹெல உரிமையின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். எதுல்கோட்டையிலுள்ள கட்சியின்…

54 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலா.!

நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலம், இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கும் வேலையையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

84 0 0
இலங்கை செய்திகள்

படோவிட்ட அசங்கவின் போ*தைப்பொருள் நடவடிக்கைகளை வழிநடத்திய பெண் சிக்கினார்.!

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.…

86 0 0
இலங்கை செய்திகள்

லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ணத்தை கைப்பற்றிய வட்டுவாகல் உதயசூரியன்.!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி 01.11.2026 நேற்று அளம்பில் இளந்தென்றல்…

83 0 0