‘ஃபோர்மியுலா 1’ பந்தய உலகின் புதிய சகாப்தம்! : கிண்ணத்தைக் கைப்பற்றிய இளம் வீரர்
2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்மியுலா 1 உலக செம்பியன்ஷிப் தொடரை இத்தாலியின் வளர்ந்து வரும் நட்சத்திர பந்தய வீரரான கிமி என்டோனெலி (Kimi Antonelli) கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ கிராண்ட் பிரிக்ஸ் (Mexico City Grand Prix) பந்தயத்தில் 3-ஆம் இடத்தைப் பிடித்ததன் மூலம், 2026 பருவகாலத்திற்கான ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து செம்பியன்ஷிப் பட்டத்தை அவர் உறுதி செய்தார்.
இதன் மூலம், ஃபோர்மியுலா 1 உலக செம்பியன்ஷிப் வரலாற்றிலேயே பட்டம் வென்ற மிகவும் இளம் வீரர் (20 வயது) என்ற புதிய உலக சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இவரை “ஃபோர்மியுலா 1 பந்தய உலகின் புதிய சகாப்தம்” எனப் பாராட்டி வருகின்றன.


