உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வருங்காலத்தில் தமிழர் ஒருவர்இந்தியாவின் பிரதமராவது உறுதி : துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அதிரடி கணிப்பு

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்றும், வருங்காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த துணை ஜனாதிபதி, விசேட சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்,

“இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும் நாட்டின் பிரதமராக வரும்போது, ஒரு தமிழரும் பிரதமராக வரமுடியும். ஒருநாள் தமிழர் ஒருவர் நிச்சயம் இந்தியப் பிரதமராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரின் ஆட்சிப் பங்களிப்புகள் குறித்து அரசியல் அமைப்புச் சட்டப் பதவியிலுள்ள என்னால் கருத்துக்கூற முடியாது. அதற்குப் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் அது குறித்துக் கேட்டுக்கொள்ளலாம்.

இந்தியா உலகளவில் வல்லரசு நாடாவதைத் துரிதமாக நோக்கி நகர்கின்றது. அதனை உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மதுரை மீனாட்சி அம்மனின் ஆசியால் அனைவருக்கும் நன்மையே நடக்கும். மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!

இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு…

89 0 0
இந்திய செய்திகள்

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்!

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “தனக்கு ஒரு குறை என்னவென்றால், நீண்ட காலமாக கூண்டுக்குள்…

92 0 0
இந்திய செய்திகள்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைநகர்…

99 0 0
இந்திய செய்திகள்

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்! ஐவர் ப@லி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச…

103 0 0