உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொருளாதாரத் தோல்வியை மறைக்க அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்த அரசு : முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்றே தற்போதைய அரசும் நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அடக்குமுறை வழியையே தேர்ந்தெடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி.,

“நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு முற்றிலும் தவறியுள்ளமையால், பொருளாதார நெருக்கடியின் பாரிய சுமைகள் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகின்றன. பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் எரிபொருள்களின் விலைகளிலும் உயர்வுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பே நிலவுகின்றது.

இவ்வாறான இக்கட்டான சூழலில், ‘அஸ்வெசும’ நலன்புரி உதவிகளைப் பெற்றுவந்த இலட்சக்கணக்கான ஏழை மக்களை அரசு தன்னிச்சையாக அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில், அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அரசு எவ்வாறு இவ்வளவு பெருமளவில் குறைக்க முடியும்?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டமூலங்களின் ஆபத்துகள் குறித்து மேலும் விளக்கிய அவர்,

“அரசின் தவறான சமூக, பொருளாதாரத் திட்டங்களால் எவ்விதப் பயனும் கிடைக்காத நிலையில், விலைவாசி உயர்வுக்கும் உரிமைகளுக்குமாகவும் மக்கள் எதிர்வரும் மாதங்களில் வீதிக்குக் கிளம்பி வந்து போராடுவார்கள் என்பதை உணர்ந்தே அரசு  அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்’ மற்றும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான ஆபத்தான சட்டங்களைக் கொண்டுவரப் பார்க்கின்றனர். தங்களது இயலாமையை மறைக்க வரலாற்று ரீதியாகக் கடந்த ஆட்சியாளர்கள் பயன்படுத்திய அதே அடக்குமுறை வழியையே இவர்களும் பின்பற்றுகின்றனர்.

தொழில்சார் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கங்களின் நியாயமான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கூட இந்தப் புதிய சட்டமூலங்களின் கீழ் ‘பயங்கரவாதம்’ என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சங்கங்கள் பெரும் அச்சமடைந்துள்ளன. இந்தக் சட்டமூலங்கள் தொழிற்சங்கங்களுக்கு மட்டுமன்றி, ஊடகவியலாளர்கள் மற்றும் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இஸ்ரேலிய அரபு சிறுபான்மையினரின் தேர்தல் தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்! – மனோ எம்.பி. சுட்டிக்காட்டு

இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது…

73 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் தாயகமும் வாழ்வுரிமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் : யாழில் பொதுப் பிரகடனம் வெளியீடு!

வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு (இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு) இன்றுடன் (30.10.2026) 36 வருடங்கள் பூர்த்தியடைவதைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகூறல்…

76 0 0
இலங்கை செய்திகள்

மக்களின் எதிர்கால பாதுகாப்பிற்காகவே பச்சை குத்துதல் தொடர்பிலான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது!

மக்களின் எதிர்கால பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே நாட்டில் பச்சை குத்துதல் (Tattoo) தொடர்பான புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.…

81 0 0
இலங்கை செய்திகள்

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெற முடியாது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்…

91 0 0