உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேலிய அரபு சிறுபான்மையினரின் தேர்தல் தீர்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம்! – மனோ எம்.பி. சுட்டிக்காட்டு

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
74 பார்வைகள்

இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் அரசியல் தாக்கம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இஸ்ரேலில் அரபுத் தலைமைகளின் கீழ் செயற்படும் இரு பிரதான அரசியல் கூட்டணிகள் தேர்தலில் போட்டியிட்டு, மொத்தமாக 19 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத் தீர்மானங்களில் அரசியல் ரீதியாகப் பேரம் பேசக்கூடிய பலமிக்கத் தரப்பாகத் தங்களை அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர்.

இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை கிடையாது. நாடாளுமன்றத்தின் ஊடாகவே பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.” – என்றார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலுடன் இதனை ஒப்பிட்டுப் பேசிய அவர்,

“இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நண்பர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அலைக்கு அடிபணிந்து வாக்களித்தனர்.

இதன் பரிதாபகரமான விளைவாக, இன்று பல தமிழ் பேசும் மாவட்டங்களில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாத அவல நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், இஸ்ரேலிய அரபுச் சிறுபான்மை மக்கள் அரசியல் தனித்துவத்துடன் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்குக் கண் திறக்கும் பாடமாகும். நான் கூறுவதன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குச் சிந்திக்கும் ஆற்றல் அவசியம். இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொருளாதாரத் தோல்வியை மறைக்க அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்த அரசு : முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றச்சாட்டு!

கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்றே தற்போதைய அரசும் நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அடக்குமுறை வழியையே…

75 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் தாயகமும் வாழ்வுரிமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் : யாழில் பொதுப் பிரகடனம் வெளியீடு!

வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு (இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு) இன்றுடன் (30.10.2026) 36 வருடங்கள் பூர்த்தியடைவதைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகூறல்…

76 0 0
இலங்கை செய்திகள்

மக்களின் எதிர்கால பாதுகாப்பிற்காகவே பச்சை குத்துதல் தொடர்பிலான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது!

மக்களின் எதிர்கால பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே நாட்டில் பச்சை குத்துதல் (Tattoo) தொடர்பான புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.…

81 0 0
இலங்கை செய்திகள்

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெற முடியாது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்…

91 0 0