மக்களின் எதிர்கால பாதுகாப்பிற்காகவே பச்சை குத்துதல் தொடர்பிலான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது!
மக்களின் எதிர்கால பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே நாட்டில் பச்சை குத்துதல் (Tattoo) தொடர்பான புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பச்சை குத்துதல் தொடர்பான சட்ட விதிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போர்ட் சிட்டி பகுதியில் குற்றக் கும்பலொன்று கைது செய்யப்பட்ட சம்பவத்தை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் ஒரே மாதிரியான பச்சைகள் காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் தேவையான சட்டங்களை இயற்றியிருக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்காகச் சட்டத்தை இயற்றுவதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


