உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெற முடியாது!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
77 பார்வைகள்

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 03ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை எனக் குறிப்பிட்ட அவர், அவை கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள விடயங்கள் மற்றும் அதன் நடைமுறைசார்  விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து அதனை நிகழ்ச்சி நிரலில் (Order Paper) சேர்த்து வெளியிட்டதாகவும் உறுப்பினர் இங்கு குறிப்பிட்டார்.

அதன்படி, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரணையையும் பின்னர் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த அவர், அதனைத் திரும்பப் பெற வேண்டுமென்றால் அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற வேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றின் மூலம் மட்டுமே அதனை நீக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்தி அவர்,

“இந்தச் சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை.

ஒருபுறம் ஊழல், மறுபுறம் நடைமுறைசார் பிழைகள், மற்றும் நியாயமற்ற பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகள் என இவை அனைத்தும் இந்த 50 குற்றச்சாட்டுகளிலும் அடங்கியுள்ளன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாங்கள் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் இதன் உள்ளடக்கங்கள் மற்றும் நடைமுறைசார் விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து, அதனைப் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.

அப்படியானால், பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரிப்பையும் மீண்டும் திரும்பப் பெற முடியாது. அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற்றாலோ அல்லது பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலோ மட்டுமே அது சாத்தியமாகும்.

எனவே, பாராளுமன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு வேண்டியபடி நடந்தாலும், அரசாங்கம் விரும்பியவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளை நிராகரிக்க முடியாது. நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதென்றால் அது சேர்க்கப்பட்டதே, அதனை மாற்ற முடியாது…

என்ன காரணங்களுக்காக இந்த எதிர்ப்பை அரசாங்கம் முன்வைக்கிறது? சபாநாயகருக்கு எதிரான இந்தப் பிரேரணை குறித்து, ஒருபுறம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முறையான விசாரணையை ஆரம்பித்து ஆழமாக முன்னெடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெளிவானது.

சபாநாயகரின் சொந்த உத்தரவின் பேரில் பாராளுமன்ற அதிகாரிகளே இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்தக் 50 குற்றச்சாட்டுகளில் சுமார் 30 குற்றச்சாட்டுகளுக்குச் சாட்சியங்களைக் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை எழுத்துப்பூர்வ சாட்சியங்களாக மாறியுள்ளன.

இத்தகையதொரு சூழலில், சபாநாயகரின் நிரபராதித் தன்மையைக் குறித்துப் பேசுவதற்குச் சபை முதல்வரைத் தவிர வேறு யாருமில்லை. சபாநாயகர் இந்தட்டுக் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்றோ அல்லது குற்றச்சாட்டுகள் தவறு என்றோ சபை முதல்வர்கூடக் கூறுவதில்லை. மாறாக, இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆபாசமான விடயங்கள் அடங்கியுள்ளதாகவே சபாநாயகர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், நியாயமற்ற முறையில் செயற்படுதல், பாராளுமன்ற பாரம்பரியத்தைப் பொருட்படுத்தாமல் இருத்தல், நிலையியல் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்படுதல் ஆகியவை குறித்து மிகவும் விரிவான மற்றும் முறையான குற்றச்சாட்டுகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

அவ்வாறெனில், இத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டக் விடயங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுமானால் நமது பாரம்பரியம் என்ன? நாட்டின் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதாகும். இதற்கு முன்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் சட்டரீதியான சில விடயங்கள் குறித்துச் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது.

இந்த 10ஆவது பாராளுமன்றத்தில்கூட நாங்கள் அவ்வாறு ஆலோசனை பெற்றுள்ளோம்… ஆனால் இன்றுவரை இதுகுறித்துச் சட்ட மா அதிபரிடம் வினவப்படவில்லை.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக…

80 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண முஸ்லிம்களின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு!  

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு இன்று (30) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக…

81 0 0
இலங்கை செய்திகள்

பேரிடர்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பு.!

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி…

82 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழில் துறையின் செயல்திறனை மேம்படுத்த 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்.!

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவத்தை மேலும் நிலையானதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், கள உத்தியோகத்தர்களுக்காக 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான…

75 0 0