உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட என்.பி.பி. அரசு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான அடக்குமுறைச் சட்டங்களை அரசு அடிக்கடி நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடக்குமுறைச் சட்டங்களை இரத்துச் செய்து வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்பப் போவதாக வாக்குறுதியளித்த அரசு, தற்போது அதற்கு முற்றிலும் மாறாகச் செயற்பட்டு வருகின்றது.

மக்களின் ஆடைச் சுதந்திரம், தலைமுடி பாணி மற்றும் உடலில் குத்தப்படும் பச்சை போன்ற தனிப்பட்ட விடயங்களைக் கூடக் கேள்விக்குள்ளாக்கி மக்களைக் கைது செய்யக்கூடிய வகையில் புதிய கொடூரச் சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸார், முப்படையினர் மற்றும் கரையோரப் பொலிஸாருக்கு இத்தகைய வரம்பற்ற அதீத அதிகாரங்களை வழங்குவது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.

உத்தேச புதிய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் தவறான நிர்வாகக் கொள்கைகளால் நாட்டின் வறுமை நிலையும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையும் முன்னெப்போதையும் விடப் பாரியளவில் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்காக நகைகளை அடகு வைப்பதும், கடன் அட்டைகள் ஊடாகக் கடன்களைப் பெறுவதும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. எரிபொருள் விலைகளும் மீண்டும் உயர்த்தப்பட்டு மக்களின் முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

நாட்டின் வருமான வழிகளோ அல்லது ஊழியர்களின் சம்பளமோ அதிகரிக்கப்படாத நிலையில், மக்கள் மீதான மறைமுக வரிகளும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மட்டுமே உயர்த்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் அரசு வெளியிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிப் புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஏமாந்து வாக்களித்த பொதுமக்கள், இன்று அதன் உண்மையான கொடூரமான உள்ளடக்கங்களை அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழலையே அரசு தோற்றுவித்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் தாயொருவர் உயிர்மாய்ப்பு.!

யாழில் இளம் தாயொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். கண்டாமை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த கருநேசன் கார்த்திகா (வயது 28) என்பவரே இவ்வாறு…

75 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்.!

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற…

52 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!

மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால…

61 0 0
இலங்கை செய்திகள்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

62 0 0