உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
68 பார்வைகள்

மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால நிலைமைகள் ஏற்படும்போது, பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (26.10.2026) திங்கட்கிழமை மாலை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரால் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாளை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் இடர்கால நிலைமைகள் ஏற்படும்போது, தமது கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளை ஆராய்ந்து, எந்தப் பாடசாலைகளை மூடுவது என்பது தொடர்பில் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார். அவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்களைத் தங்கவைக்கும் நிலையங்களாகப் பாடசாலைகள் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படலாம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கேற்ற வகையில் பாடசாலைகளைத் தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுமாறும் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் தாயொருவர் உயிர்மாய்ப்பு.!

யாழில் இளம் தாயொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். கண்டாமை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த கருநேசன் கார்த்திகா (வயது 28) என்பவரே இவ்வாறு…

80 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்.!

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற…

57 0 0
இலங்கை செய்திகள்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

70 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய இந்தியப் பிரஜை.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் 100 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இன்று (26) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…

78 0 0