உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தடுப்புக்காவலில் இருந்த நபர் உ**யிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பாளர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நாளை (27) நடைபெறவுள்ளது.

பொலிஸாரின் கொடூரத் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நேற்று (25) காலை சந்தேகநபரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் உறவினர்களின் தீவிர கோரிக்கைக்கு இணங்க சந்தேகநபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தபோதிலும், அதற்குள்ளேயே அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் தாயொருவர் உயிர்மாய்ப்பு.!

யாழில் இளம் தாயொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். கண்டாமை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த கருநேசன் கார்த்திகா (வயது 28) என்பவரே இவ்வாறு…

0 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அநுர அரசு பாதுகாக்க வேண்டும்.!

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்காமல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலமாகவே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற…

51 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.!

மத்திய கல்வி அமைச்சால் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் இடர்கால…

59 0 0
இலங்கை செய்திகள்

ஒரு வயது ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று(26) தண்ணீர் வாளியில் விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

61 0 0