உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அர்னாப்’ புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடா நடுக்கடற்பரப்பில் நிலவிய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளது என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
“இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, இந்தப் புயலானது வங்காள விரிகுடாவின் நடுக்கடற்பரப்பில், குறிப்பாக இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரத்துக்கு (போர்ட் பிளேர்) கிழக்கே சுமார் 590 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து அதிதீவிரப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இலங்கைக்கு நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

புயலின் மறைமுக வக்ர சுழற்சி காரணமாக நாட்டில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்ந்து நிலவும். வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

வங்காள விரிகுடாவின் ஆழமான நடுக்கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அலைகள் சீற்றத்துடனும் காணப்படும் என்பதால், ஒக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் ஆழ்கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் புயல் எதிர்வரும் 28 ஆம் திகதியளவில் இந்தியாவின் ஒடிசா மாநிலக் கரையைத் தாண்டிச் செல்லும் எனக் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னரே இலங்கையில் நிலவும் இந்தச் சீரற்ற காலநிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிராமசேவையாளரைத் தாக்கிய வழக்கு; இளங்குமரன் எம்.பி மீது குற்றச்சாட்டுகள்.!

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

குருநாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

72 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) பிற்பகல் 2.45 மணிக்கு வெளியிடப்பட்ட…

77 0 0