உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிராமசேவையாளரைத் தாக்கிய வழக்கு; இளங்குமரன் எம்.பி மீது குற்றச்சாட்டுகள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தாக்கினார் என்று கூறப்படும் விடயத்தை ஒட்டிய வழக்கில் அவருக்கு இன்று குற்றப்பத்திரம் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டது.

கடமையில் இருந்த கிராம சேவையாளரைத் தாக்கியமை, கடமையில் இருந்த அரச ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டன.

இரண்டு குற்றச்சாட்டுகளிலும் தான் சுத்தவாளி என்று அவர் நீதிமன்றில் மறுத்துரைத்தார்.

இதனை அடுத்து இந்த விடயத்தை ஒட்டிய வழக்கை வரும் பெப்ரவரி 18ஆம் திகதி பிற்பகலில் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் நேர நிர்ணயம் செய்தது.

கிளிநொச்சி நீதிவான் கிருஷாந்தன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பிற்பகல் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கிராம சேவையாளரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இந்த வழக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு 9 மாத கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது. ஆயினும் கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி 9 மாதங்கள் கழித்து இந்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் தரப்பு வழக்குத் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அதையடுத்து இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், 3 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தது.

இன்று வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தைப் பொலிஸார் மன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நௌபர் மௌலவி உட்பட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

கடந்த 2018 ஆம் ஆண்டு வனாத்தவில்லு, லாக்டோவத்த பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து,…

55 0 0
இலங்கை செய்திகள்

தடுப்புக்காவலில் இருந்த நபர் உ**யிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தின் மூன்று…

69 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவால் சேதமடைந்த பேருந்துகள்.!

கன மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இச் சம்பவம் இன்று (26) பிற்பகல் 3.30…

81 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

குருநாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

78 0 0