உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
85 பார்வைகள்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார்.

பிரஜா சக்தி மூலம் 54 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 மூலம் 45மில்லியன் ரூபாய் செலவில் 700 மீற்றர் முகாவில் அண்ணமார் உள்ளக வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டினை புலோப்பளை பகுதியில் பயனாளியிடம் கையளித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் தே. சுஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,
மல்லிகைப்பூ போன்ற பூக்களை வழங்குவதற்கான உபகரணங்கள், இயற்கை உரம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் “பாரிய நிதி” (4 கோடியே 50 இலட்சத்திற்கு மேல்) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தேநீர், சோடா என அனைத்திலுமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படுகிறது. இந்த வரி வருமானம் மற்றும் நிதி மூலமாகவே மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் சென்றடைகின்றன.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 இலட்சம் வீதம் 2,400 வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடுகளைப் பெறுவதுடன், பெருமளவு தொழிலுருவாக்கமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், இனவாதம், மதவாதம் இல்லாத சிந்தனையுள்ள சமுதாயத்தை உருவாக்கி நாட்டைச் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிது அவசியம்.

மக்கள் நலனை மையப்படுத்திய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

குருநாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) பிற்பகல் 2.45 மணிக்கு வெளியிடப்பட்ட…

74 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் வீதிகளை மூழ்கடித்த வெள்ளம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.!

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

93 0 0