உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் வீதிகளை மூழ்கடித்த வெள்ளம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
98 பார்வைகள்

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும், சீது விநாயகர் குளம் கிராமத்தை சேர்ந்த 21 குடும்பங்கள் உள்ளடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இலுப்பைக்கடவை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இரு கிராமங்களுக்குமான பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு, குறித்த இரு கிராமங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் நடராஜா சூரியராஜா தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்சரிவால் சேதமடைந்த பேருந்துகள்.!

கன மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இச் சம்பவம் இன்று (26) பிற்பகல் 3.30…

1 0 0
இலங்கை செய்திகள்

கிராமசேவையாளரைத் தாக்கிய வழக்கு; இளங்குமரன் எம்.பி மீது குற்றச்சாட்டுகள்.!

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

குருநாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

72 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

66 0 0