உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிரியவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான விசாரணையின்போது அவர் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாகவும், உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு மருத்துவ உதவி வழங்குவதில் பொலிஸார் தாமதித்ததாகவும் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணையின் பின்னர் நடக்க முடியாத நிலையில் இருந்த இளைஞரை பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு வெளிப்படையான காயங்கள் காணப்பட்டதாகவும், வாயிலிருந்து இரத்தம் வெளியேறியதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்த பின்னரே இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், குறித்த இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு இளைஞரின் நிலைமை குறித்தும் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த இளைஞன் எங்கிருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இரண்டாவது நபர் காணாமல் ஆக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், சட்டவிரோதமாகச் செயற்பட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும், அவர் வகிக்கும் பதவிநிலையைப் பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காவலில் இருந்தபோது இளைஞருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை, ஹோமாகம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் மரணத்திற்கான காரணத்தையும் சம்பவத்தின் சூழ்நிலைகளையும் கண்டறிவதற்கான நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களும் பிரதேச மக்களும் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் வீதிகளை மூழ்கடித்த வெள்ளம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.!

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

79 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் கொ**லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்களுக்குள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார…

67 0 0
இலங்கை செய்திகள்

‘அர்னாப்’ புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை.!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா நடுக்கடற்பரப்பில் நிலவிய…

72 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தொடர்மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 25.10.2026 நேற்று தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.…

87 0 0