உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கில் கொ**லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.!

இலங்கை செய்திகள் 42 நிமிடங்கள் முன்
70 பார்வைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்களுக்குள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் யாழ். ஊடக அமையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்றை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர், யாழ். ஊடக அமையத்துக்கு வருகை தந்து அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இழுபறியின்றி உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகவியலாளர்கள் முன்வைத்தனர்.

ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தற்போதைய அரசு தெற்கு ஊடகவியலாளர்கள் அல்லது வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற எவ்வித இன, பிரதேச பாகுபாடுகளுடனும் செயற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் எவரும் எதிர்பார்த்திராத நீதியான தீர்ப்புகள் தற்போதைய ஆட்சியில் வெளிவந்து கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் தமது அரசின் ஆட்சிக் காலத்தில் நிச்சயம் நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், அதற்காகத் தங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு ஊடக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர்களின் பிரதான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும், அதனைப் பெற்று ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகரசபை உறுப்பினருமான கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (26) பிற்பகல் 2.45 மணிக்கு வெளியிடப்பட்ட…

73 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் வீதிகளை மூழ்கடித்த வெள்ளம்; அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.!

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

93 0 0
இலங்கை செய்திகள்

‘அர்னாப்’ புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை.!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா நடுக்கடற்பரப்பில் நிலவிய…

77 0 0