உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடன் கொழும்பில் விசேட பேச்சு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தச் சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து விசேட கலந்துரையாடலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி சபைகள் வெறும் குப்பைகளை அகற்றும் நிறுவனங்களாக மட்டுமே இயங்குவதைத் தவிர்த்து, அவை எதிர்கொள்ளும் அடிப்படை நிதியியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி சபைகளில் நிறைவேற்றப்படும் துணைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாகாண சபைகளின் அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் 500 முதல் 1000 ரூபாய் போன்ற மிகக் குறைந்த அபராதத் தொகைகள் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடியாமை போன்ற நடைமுறைச் சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுத்த பின்னர் சபைகளிடம் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இருப்பதில்லை என்றும், எனவே வடக்கு, கிழக்கின் மாவட்ட ரீதியிலான உள்ளூராட்சிப் பிரதிநிதிகளைக் கொழும்புக்கு அழைத்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சாணக்கியன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதிலளித்த அமைச்சர் சந்தன அபயரத்ன, உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தலைவர்களை விரைவில் கொழும்புக்கு அழைத்து விரிவான பேச்சுகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொய்களை அள்ளிக்கொட்டி ஆட்சியை கைப்பற்றலாம் எனக் கனவு காணாதீர்கள்.!

பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…

63 0 0
இலங்கை செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உ**யிரிழப்பு.!

குவைத் நாட்டில் இருவேறு இடங்களில் உள்ள வீடுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கைப் பெண்கள் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பெண்களின் மரணங்கள் தொடர்பிலும் குவைத்…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது.!

அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…

83 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராணுவச் சிப்பாய் கொ**லை.!

கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.…

75 0 0