உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இனப் படுகொ**லையின் சாட்சியமே செம்மணி; ராஜ் சோமதேவாவின் அறிக்கை பொய்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், செம்மணி மனிதப் புதைகுழி என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் மிக முக்கிய ஆதாரம் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பும்போது, அரியாலை – கொழும்புத்துறை கடல் பகுதிக்கு அருகிலிருந்த இராணுவச் சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுச் சோதனையிடப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களுடன் சேர்த்து ஏனையோரும் பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்று சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனரா என்ற பலமான சந்தேகம் நிலவுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவா மண்ணைப் பரிசோதிக்கும் தகுதியை மட்டுமே கொண்டுள்ளார் என்று குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியோரின் மனித எச்சங்களை அறிவியல் பூர்வமான தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமல் அவரது அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பொம்மைகளுடனும், துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையை வைத்து அரசு இறுதி முடிவுக்கு வரக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

உள்ளக விசாரணைகள் மூலம் உண்மைகள் மறைக்கப்படுவதையே செம்மணி விவகாரம் வெளிப்படுத்துகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

77 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

73 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

84 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

57 0 0