உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரித்தானியாவைத் தாக்கிய ‘ஒஸ்டின்’ புயல் – 7,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
82 பார்வைகள்

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் செனல் தீவுகளை ‘ஒஸ்டின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளில் சுமார் 7,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு சுமார் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளின் பல இடங்களுக்கு செம்மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேர்ன்சி மற்றும் ஜெர்சி தீவுகளுக்கு மிகக் கடுமையான வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஜெர்சியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மின்சாரக் கம்பிகளும் அறுந்து வீழ்ந்துள்ளன. இதனால், வீதிப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு டெவோன் பிராந்திய சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நோபல் பரிசு தான் வழங்கவில்லை புலிட்சர் பரிசாவது வழங்கி இருக்கலாம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புலிட்சர் பரிசும் தனக்கு வழங்கப்பட்டிருக்க…

93 0 0
உலக செய்திகள்

தாய்வானில் சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து!

தாய்வானை நோக்கி சக்திவாய்ந்த புயல் நகர்ந்து வருவதையடுத்து, அங்கு சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இன்று…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் போர்க்களத்தில் முக்கிய திருப்பம்!

யுக்ரைனின் போர்க்களத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு அமைப்பாக விளங்கும் ‘ஸ்டார்ஷீல்ட்’ இராணுவ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

85 0 0
உலக செய்திகள்

சவூதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

103 0 0