உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மைல்கல்! : சங்கக்கார பாராட்டு!

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
74 பார்வைகள்

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளையில், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக அணியின் கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காகக் கொண்டு, அணியை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அணியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக இந்த வெற்றியிலிருந்து முறையான திட்டவட்டமான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியமானது என்றும் குமார் சங்கக்கார தனது ‘X’ பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அசத்தியது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை, ஒரு பந்து மாத்திரம் (49.5 ஓவர்கள்) மீதமிருக்க, இலங்கை அணி துடுப்பாடி வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறிக்குத் தங்கப் பதக்கம்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் இலங்கையின் பிரதீப்…

65 0 0
விளையாட்டுச் செய்திகள்

430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது எப்படி? – தசுன் ஷானக விளக்கம்!

அணியின் அதிரடியான துடுப்பாட்டம், வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சரியான வியூகங்களே 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டுவதற்கு உதவியதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன்…

68 0 0
விளையாட்டுச் செய்திகள்

ராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது மிகவுயர்ந்த வெற்றி…

77 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை துரத்தும் ஜோ ரூட்?

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு (Joe Root) இன்னும் 64…

93 0 0