உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

விளையாட்டுச் செய்திகள் 6 மணி நேரம் முன்
78 பார்வைகள்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது மிகவுயர்ந்த வெற்றி சாதனை படைத்தது.

430 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

பவன் ரத்நாயக்க அபாரமாக விளையாடி 130 ஓட்டங்கள் குவித்தார். தசுன் ஷானக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 97 ஓட்டங்கள் எடுத்தனர். ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

முன்னதாக, இங்கிலாந்து அணி தனது 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 429 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான மொத்த ஓட்டங்களை குவித்தது. இந்த போட்டியில் ஹாரி புரூக், ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தும் தோல்வியடைந்த முதல் வீரர் என்ற நிலையை எட்டினார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் 103 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறிக்குத் தங்கப் பதக்கம்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் T46 பிரிவில் இலங்கையின் பிரதீப்…

65 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மைல்கல்! : சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது எப்படி? – தசுன் ஷானக விளக்கம்!

அணியின் அதிரடியான துடுப்பாட்டம், வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சரியான வியூகங்களே 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டுவதற்கு உதவியதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன்…

68 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை துரத்தும் ஜோ ரூட்?

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு (Joe Root) இன்னும் 64…

93 0 0