ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை துரத்தும் ஜோ ரூட்?
ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு (Joe Root) இன்னும் 64 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரான ஜோ ரூட், இதுவரை 196 போட்டிகளில் விளையாடி 7,936 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அவரது ஓட்ட எண்ணிக்கையில் 20 சதங்களும் 48 அரைச் சதங்களும் அடங்குகின்றன.
இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இயோன் மோர்கன் 6,957 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜோஸ் பட்லர் 5,678 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
தற்போது இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் விளையாடிவரும் ஜோ ரூட், 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

