உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
38 பார்வைகள்

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அநுர அரசே புதிய பயங்கரவாதச் சட்டமும் வேண்டாம் பழைய பயங்கரவாதச் சட்டமும் வேண்டாம் என்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பும் மஜகர் வாசிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சார்ந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களான நாங்கள். பயங்கரவாதச் சட்டத்தினால் துன்புறுத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகின மக்களான நாங்கள், போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் நாங்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளை இதுவரை தேடிக்கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே குரலில் “பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” வேண்டாம் எனக் கோருகிறோம்

இந்தச் சட்டத்துக்கமைய, சரத்து 19 பொலிசாருக்கு உள்ள அதிகாரம் போல இராணுவத்துக்கும் கடலோர காவல் படைக்கும் சந்தேக நபரை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சரத்து 20 பொலிஸ் மாத்திரமன்றி இராணுவமும் கடலோர காவல் படையும் வீடுகளுக்கு சென்று சோதனையிட, தெருவில் செல்கையில் தடுத்து சோதனையிட, விசாரணை செய்ய அதிகாரமுண்டு, பிடியாணை இல்லாமல் கைது செய்ய முடியும்.

சரத்து 27: சந்தேநபரை இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும்

சரத்து 38: தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் அனுமதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று விசாரணை செய்ய, வேறு இடத்துக்கு கொண்டுசென்று விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

சரத்து 51: இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நடக்க உள்ளதாக பொலிஸ் அதிகாரிக்கு தகவல் கிடைத்தால், ஆபத்து நடைபெறும் என பொலிஸ் அதிகாரி கருதினால், அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பதற்காக நீதவான் அனுமதி பெற்று ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் திரள்வதை, குறிப்பிட்ட கூட்டத்தைக் கூடுவதை, அல்லது ஊர்வலம் செல்வதை தடுக்க முடியும்.

ஒட்டுமொத்தத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவானது மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை முடக்கும் ஒன்றாக உள்ளது.

ஏனெனில் பொலிஸ் அதிகாரி, இராணுவம், கடலோர காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒரு விடயத்தை பயங்கரவாதம் என்று நம்பினால் அவர்கள் மக்கள் கூட்டம் கூடுவதையும். உரிமைக்காகக் குரல்கொடுப்பதையும் தடுக்க முடியும். அவர்களை கைதுசெய்ய முடியும்.

48 மணித்தியாலங்கள் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாமல் தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இதற்கிடையில், சித்திரவதைகள், கடத்தல்கள், காணாமலாக்கப்படல், படுகொலைகள் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

இந்த வன்முறைகளைத்தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் பல வருடங்களாக அனுபவித்தோம். பாதுகாப்பற்ற ஒரு வாழ்வை வாழ்ந்தோம். கைதுகள், சிறைப்படுத்தல், சித்திரவைகள், பாலியல் சித்திரவதைகள் இழைக்கப்பட்டன. இன்றும், கூட்டம் கூடப்போனால், சமூக வேலை ஒன்றை முன்னெடுத்தால் விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அழைப்பாணை வருகிறது. புலனாய்வுத்துறையினர் விசாரணை என வீடுகளுக்கே வருகின்றனர்.

ஆகவே மனித குலத்துக்கு ஆபத்தானதும் ஜனநாயக விரோத குறித்த சட்டமூலத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலைக்காகத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன்! : சஜித் உருக்கம்!!

இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் காணி மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

2019 இல் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகள் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவு

டயகம ஈஸ்ட் தோட்ட மக்கள் விரைவில் புதிய வீடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ளனர். நுவரெலியா மாவட்ட தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம ஈஸ்ட் தோட்டத்தில், அடிப்படை வசதிகளின்றி…

74 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி விமானப்படை அதிகாரி உ**யிரிழப்பு.!

மோட்டார் சைக்கிள் விபத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (9) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய ஸ்குவாட்ரன்…

66 0 0
இலங்கை செய்திகள்

தபால் நிலையத்தை கொழுந்து மடுவமாகப் பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம்.!

முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில், சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மலையக மக்களின் நலனுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட நோட்டன் ஒஸ்போர்ன் தோட்ட தபால் நிலையக் கட்டடத்தைக் கொழுந்து…

56 0 0