உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விபத்தில் சிக்கி விமானப்படை அதிகாரி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
63 பார்வைகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (9) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய ஸ்குவாட்ரன் லீடர் (squadron leader) என்கிற பொறுப்பில் இயங்கிவந்த அதிகாரியே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனது வசிப்பிடம் அமைந்துள்ள கெப்பித்திகொல்லாவ பகுதியிலிருந்து தற்காலிக தங்குமிடமான தியத்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குறித்த அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் கூறும் தியத்தலாவை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலைக்காகத் தமிழர்களிடம்
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன்!  : சஜித் உருக்கம்!!

இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் காணி மற்றும்…

51 0 0
இலங்கை செய்திகள்

2019 இல் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகள் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவு

டயகம ஈஸ்ட் தோட்ட மக்கள் விரைவில் புதிய வீடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ளனர். நுவரெலியா மாவட்ட தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம ஈஸ்ட் தோட்டத்தில், அடிப்படை வசதிகளின்றி…

71 0 0
இலங்கை செய்திகள்

தபால் நிலையத்தை கொழுந்து மடுவமாகப் பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம்.!

முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில், சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மலையக மக்களின் நலனுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட நோட்டன் ஒஸ்போர்ன் தோட்ட தபால் நிலையக் கட்டடத்தைக் கொழுந்து…

53 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்.!

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு…

34 0 0