உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
86 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை (பார்களை) ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பல அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம் கொண்டவர்களிடம் கோடிக்கணக்கான பெறுமதிகளுக்குக் கைமாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைமாறிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாகச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிட்டியதைத் தொடர்ந்து, அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காகச் சம்பந்தப்பட்டவர்கள் நேற்று பிரதேச செயலகங்களை நாடியுள்ளனர்.

அதற்கமைய, சங்கானை, கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் நேற்று பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 4 ஆவது செயலகத்திலும் இன்று பணம் செலுத்தப்படலாம் எனத் தெரியவருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில்…

68 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம்.!

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று புதன் கிழமை (07.10.2026) முதல் திங்கட்கிழமை 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், இன்று காலை 9…

63 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலை தொடர்பாக கலந்துரையாடல்.!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார…

73 0 0
இலங்கை செய்திகள்

தண்டனைக் காலம் 3 ஆண்டுகளுக்கும் அதிகம் எனின் சிறை ஆடை கட்டாயம்.!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப்…

75 0 0