தபால் நிலையத்தை கொழுந்து மடுவமாகப் பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம்.!
முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில், சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மலையக மக்களின் நலனுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட நோட்டன் ஒஸ்போர்ன் தோட்ட தபால் நிலையக் கட்டடத்தைக் கொழுந்து மடுவமாகப் பயன்படுத்துவதற்கு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகமும், தங்காலை – நுவரெலியா – கொட்டகலை வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளருமான கௌரவ புஷ்பா விஷ்வநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், வலப்பனை பிரதேச சபை உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. எஸ். ராதாகிருஷ்ணனின் நாடாளுமன்ற செயலாளருமான கௌரவ தமிழ்மாறன் ஜனார்த்தன் மற்றும் தோட்டத் தலைவர் சுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து தோட்ட நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலின்போது, குறித்த கட்டடத்தை உடனடியாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் கையளிக்க வேண்டும் என கௌரவ புஷ்பா விஷ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

