உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
62 பார்வைகள்

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இந்தோனேஷியாவில் பதிவான மிகவும் மோசமான காட்டுத் தீ பருவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

விவசாயிகளும் நிறுவனங்களும் காடுகளை அழிக்காமல் குறைந்த செலவில் நிலங்களைச் சுத்தப்படுத்துவதற்காகப் பின்பற்றும் சட்டவிரோதமான ‘வெட்டி எரிக்கும்’ (slash-and-burn) நடைமுறைகளே இந்தக் காட்டுத்தீக்கு முக்கியக் காரணமாகும்.

காட்டுத்தீ மற்றும் நிலப்பரப்புத் தீச்சம்பவங்கள் காரணமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 50,000 க்கும் அதிகமான சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டில் உருவாகியுள்ள “சுப்பர் எல் நினோ” (Super El Niño) காலநிலை மாற்றம் இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் வறட்சியை மேலும் மோசமாக்கியுள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நீடித்த புகைமூட்ட நெருக்கடி காரணமாக மலேசியாவில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல வெளிப்புறக் கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, சிங்கப்பூரில் காற்றின் தரம் “சுகாதாரமற்ற” (Unhealthy) நிலையை எட்டியுள்ளபோதிலும், அந்த நாட்டில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற எஃப்1 கிராண்ட் ப்ரீ (F1 Grand Prix) கார் பந்தயம் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப்…

82 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

50 0 0
உலக செய்திகள்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit…

96 0 0
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சித்தரிக்கும் தங்க நிற நிர்வாணச் சிலையொன்று பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்…

64 0 0