சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) தன் சக நாட்டு வீராங்கனையான எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் (Ekaterina Alexandrova) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிர்ரா ஆண்ட்ரீவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் இவர் செக் குடியரசின் நிகோலா பார்துன்கோவாவை (Nikola Bartunkova) எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.