உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

விளையாட்டுச் செய்திகள் 14 மணி நேரம் முன்
72 பார்வைகள்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், சவுரவ் கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி அணியின் ஆலோசகராக சில ஆண்டுகள் செயல்பட்ட கங்குலி, அந்த அணியில் பல்வேறு பொறுப்புகளையும் கவனித்த அனுபவம் உண்டு.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கான டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணி தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என குறிப்பிட்டுள்ள கங்குலி, வரும் சீசனில் வலுவான அணியை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளது. இந்த சூழலில் வெற்றிகரமான இந்திய அணி தலைவராக வலம் வந்தவரும் அனுபவம் மிக்க வீரருமான கங்குலி, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் வீரர் ஜாகிர்கான் அண்மையில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடை பெற்றார் மெஸ்ஸி

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார். பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர்…

71 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு சமரி அத்தபத்து பரிந்துரை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த…

56 0 0