உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருள் கடத்தல்; சந்தேகநபரின் சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
79 பார்வைகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களை அடுத்து, இந்தக் குற்றவாளியுடன் தொடர்புடைய நபருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களுக்கு அமைய,
சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தைக் கொண்டு, மடபத்த பகுதியில் 12 பேர்ச்சஸ் காணியில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சொத்து சந்தேகநபரின் மனைவியின் மூத்த சகோதரரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, குறித்த சொத்து விற்பனை செய்யப்படுவதையும், கைமாற்றப்படுவதையும் அல்லது வேறு எந்தவிதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதையும் தடுக்கும் வகையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த சொத்து மீதான முடக்க உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதன்படி, நேற்று (09) முதல் 14 நாட்களுக்கு இந்த முடக்கம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

93 0 0
இலங்கை செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

88 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

77 0 0
இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கொழும்பு, ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பனை – மொரகஹஹேன வீதியின் மாயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று…

71 0 0