உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
128 பார்வைகள்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வ கூட்டம் இன்று (10.10.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையை உருவாக்குவதற்கான ஆவணத்தில் அதன் உறுப்பினர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தனர். அதற்கமைவாக, சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பதவிவழி உறுப்பினர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டனர். மற்றொரு பதவிவழி உறுப்பினரான புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இணையவழி ஊடாக கூட்டத்தில் பங்கேற்றார்.

அதேவேளை, துறைசார் உறுப்பினர்களாகக் கலை மற்றும் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த திருமதி சாந்தினி சிவநேசன், சட்டத்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரபாகரன், வர்த்தகத் துறையைச் சேர்ந்த இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த கோசலை மதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் நிர்வகிப்பதற்கான நடைமுறைகள், நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் ஆவணங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் கட்டடக்கலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான விளக்கங்கள் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன், உறுப்பினர்கள் பண்பாட்டு மையத்தின் பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

84 கோடி பெண்கள் பா@லியல் ரீதியான வன்முறைகளால் பாதிப்பு – பிரதமர்

உலகளவில் 84 கோடி பெண்கள் பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளுக்கு எதிரான…

27 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியத்துறையில் நிலவும் பற்றாக்குறைகள் தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி..!

பாராளுமன்றத்தில் மருத்துவப் புனர்வாழ்வு சேவைகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், இலங்கையில் இயங்குகின்ற மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகள் மற்றும்…

35 0 0
இலங்கை செய்திகள்

பால் ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்த மாணவி : தவறி கீழே விழுந்து உயி@ரிழப்பு!

பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்…

41 0 0
இலங்கை செய்திகள்

மூடநம்பிக்கை, சாதியப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சரோஜா!

மூடநம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் சமூக நடைமுறைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, முன்மொழியப்பட்டுள்ள சமூக ஒழுக்கவியல் கட்டமைப்பின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்…

41 0 0