உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
88 பார்வைகள்

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஐந்து நாட்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09.10.2026) நடைபெற்றன.

இப்போட்டியில் பங்குபற்றிய மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும், இருவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும், துணுக்காய் கல்வி வலயத்துக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு:-
எஸ். டானுஜா (S. Danuja) :- 57 – 60 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம், எம். அபிஷா (M. Abisha) :- 60 – 65 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம், யு.கலைவாணி (U. Kalaivaani) – 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 48 – 50 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்.

இம்மாணவர்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சிகளை, முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரரும் பல தேசிய வீரர்களை உருவாக்கியவருமான கா. நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்டர்) மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனையும் குத்துச்சண்டைப் பயிற்றுநருமான இந்துகா தேவி ஆகியோர் வழங்கியிருந்தனர்.

தேசிய மட்டப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றதன் மூலம், வடமாகாணப் பாடசாலைகளில் அதிக பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மல்லாவி மத்திய கல்லூரி சாதனை படைத்துள்ளது.

குத்துச்சண்டைப் போட்டியில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமையும் விடாமுயற்சியும் பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளதுடன், மல்லாவி பிரதேசத்துக்கும் துணுக்காய் கல்வி வலயத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

93 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்; சந்தேகநபரின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்…

79 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

77 0 0
இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கொழும்பு, ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பனை – மொரகஹஹேன வீதியின் மாயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று…

71 0 0