அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து வேட்டை!
இனம், மதம், மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து, மனிதாபிமானத்துடன் ஒரு மனித உயிரைப் பாதுகாப்பதற்காக யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்கான பிரமாண்ட கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்பு மன்றாட்டப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல், நற்பிட்டிமுனை ஓராம் கட்டை சந்தியில் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில், பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கட்சி, மத பேதமின்றிப் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









