உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

புதுக்குடியிருப்பில் காணியற்ற 437 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
18 பார்வைகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசேயலாளர் பிரிவில் குடியிருப்பதற்கு காணிகளில்லாத 437குடும்பங்களுக்கும் விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்படும் சந்தர்பங்களில், காணி அற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், சட்டவிரோதமானமுறையில் அதிகளவான காணிகளைக் கையப்படுத்தியுள்ளோரையும் அந்தக்காணிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், அதன்பின்னர் அந்தக் காணிகளையும் காணி அற்றோருக்கு பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரவிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 437பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லை. காணிகளற்ற அந்த மக்கள் என்ன செய்வது. அந்த மக்களுக்கும் காணிகள் வழங்கப்படவேண்டும்.

காணிகளற்ற அந்த மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக அனர்த்த நிலைமைகளின்போது காணிகள் அற்ற அந்த மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டால் உரிய கொடுப்பனவுகளையோ, நிவாரணங்களையோ பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுகின்றது. அத்தோடு வீடுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே காணியற்றோருக்கு விரைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,

எமக்கு 437பேருக்கு காணிகளை வழங்கவேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

அந்த 437பேருக்கும் காணிகளை வழங்குவதற்கு இரண்டு தெரிவுகள் காணப்படுகின்றன.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அந்தக் காணிகளை காணி அற்றோருக்கு வழங்க முடியும்.

அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவில் அதிகளவு காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருப்போருக்கெதிராக பிரதேசசெயலகம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது.

அதற்கமைய அவ்வாறு சட்டவிரோதமாக அதிகளவு காணிகளை கைப்பற்றி வைத்திருந்த 49பேரை காணிகளிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக காணிகளை சட்டவிரோதமாக கையகப்ழடுத்தி வைத்திருப்பவர்களை நீதிமன்றம் விரைவாக வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே அந்தக்காணிகளும் அரச காணிகளாக மாறும்போது அந்தக்காணிகளையும் காணி அற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்குமாறு “புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையைக் குறைத்து அவரை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘புலம்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

25 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

25 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

27 0 0