உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும்! – ரணில் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
11 பார்வைகள்

ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நாளாந்த வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.

ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்குமாறு “புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையைக் குறைத்து அவரை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘புலம்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

25 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

25 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

27 0 0