உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது! : முன்னாள் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
30 பார்வைகள்

“நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா எனப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி நாட்டைப் பொறுப்பேற்க முடியாது; ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில் இல்லை.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும்; அப்போதுதான் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும். ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும்போது ஆட்சியைப் பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில்தான் நான் முன்வந்தேன். யாரும் முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே நாட்டைப் பொறுப்பேற்றேன்.

இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது. எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பொறுப்பை ஏற்றேன்.

ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அன்று ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச் சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்குமாறு “புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையைக் குறைத்து அவரை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘புலம்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

25 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

25 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

27 0 0