உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்குக் கடிதம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
23 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர அழுத்தங்களை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றத்தால் முன்னர் தண்டிக்கப்பட்ட அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளதாவது:-

“சிவராசா அனோஜன் குற்ற நோக்கத்துடன் சவூதிக்குச் செல்லவில்லை. பெற்றோர் சிவராசா மற்றும் யோகேஸ்வரி அடங்கிய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனேயே அவர் அங்கு புலம்பெயர் தொழிலாளராகப் பணியாற்றினார்.

பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் இந்தக் குடும்பமும் ஒன்றாகும்.

இவ்வாறான கடுமையான தண்டனை, ஏற்கனவே இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும் விளைவை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவின் மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் சமூக-பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

எனவே, தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவற்றுக்குச் சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்காகச் சவூதி அரேபிய அரசுடன் இணைந்து அவசியமான இராஜதந்திர நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வழங்குமாறு உங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்குமாறு “புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையைக் குறைத்து அவரை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘புலம்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

25 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

25 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

27 0 0