உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
20 பார்வைகள்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தம் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களிடம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்ததாகவும், இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்குத் தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.

போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறினார்.

மேலும், இந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும், அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போது முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

6 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது…

16 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்.!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண…

22 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச…

25 0 0