உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

பசிலைக் கண்டறிய சர்வதேச பொலிஸாரின் நீல அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
25 பார்வைகள்

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி 12 ஆயிரம் ரி-ஷேர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை நாடியுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள பசில் ராஜபக்ஷவை அடையாளம் கண்டு, அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்டர்போல் ஊடாக இந்த நீல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாவுக்குக் கொள்வனவு செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மேலும் பலர் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவருக்கு எதிராக மீண்டும் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார் என்று அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்டர்போலின் நீல அறிவித்தல் என்பது ஒருவரை சர்வதேச ரீதியில் கைது செய்வதற்கான பிடியாணை அல்ல. மாறாக, குற்றவியல் விசாரணையொன்றுடன் தொடர்புடைய நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் சர்வதேச எச்சரிக்கை முறைமையாகும்.

இதற்குப் புறம்பாக, சிவப்பு அறிவித்தல் என்பது ஒருவரைக் கண்டறிந்து, நாடு கடத்தல் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்காலிகமாகக் கைது செய்யுமாறு சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்குக் கோரும் தன்மையுடையதாகும்.

தற்போது பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீல அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு மீள அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது…

10 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்.!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண…

20 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே…

19 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச…

21 0 0