உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
24 பார்வைகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று 19.09.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் குறித்த முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதிக வேகம் காரணமாக வேகத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே…

16 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச…

19 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக 24 ஆம் திகதி ஒன்றிணையுங்கள்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசின் ஜனநாயக விரோத போக்கைத்…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இந்த விடயத்தை…

33 0 0