உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
40 பார்வைகள்

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாட்டை சியோலில் நடத்துகிறது.

தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பின் பேரில் உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உள்நாட்டு தொழில்துறைகளை மேம்படுத்த
மாநாட்டிற்கு முன்னதாக இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, முக்கியமான கனிம வளங்கள், எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் கூட்டுப் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சீனாவிற்கு இருக்கும் தொழிற்சார் மூலப்பொருட்களின் அதிகளவிலான தேவையை குறைத்து, தமக்கான விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்த தென்கொரியாவிற்கு மத்திய ஆசிய நாடுகளின் கனிம வளங்கள் அவசியமாகின்றன.

அதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு தொழில்துறைகளை மேம்படுத்த தென்கொரியாவை ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனால் வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்ட ‘கொரியோ-சரம்’ சமூகத்தினர் மூலமாக இரு பிராந்தியங்களுக்கும் இடையே பல தசாப்த கால கலாசாரப் பிணைப்பு நிலவி வருகின்றது.

இத்துடன், தென்கொரியாவின் கே-பாப் (K-pop) மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் உருவாகியுள்ள கலாசாரச் செல்வாக்கும், வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தியுள்ளன.

ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள மத்திய ஆசிய பிராந்தியத்தில், அரசியல் ரீதியாக எந்தவொரு அழுத்தமும் இல்லாத ஒரு வணிகப் பங்காளியாக தென்கொரியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த உச்சிமாநாடு வழிவகுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

37 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம்…

34 0 0
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக…

39 0 0
உலக செய்திகள்

நேரலையில் உலங்கு வானூர்தி விபத்து : மூவர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். லொஸ் ஏஞ்சலிஸ்…

59 0 0