உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
31 பார்வைகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சார்பற்ற கணக்கு ஆய்வு அமைப்பு செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தது.

அதேவேளையில், இமோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் வழிகளைத் தேடி வருகிறது.

2026 ஆகஸ்ட் 1 வரையிலான செலவினங்களைக் கணக்கிட்ட காங்கிரஸின் வரவு செலவு அலுவலகத்தின் கணக்கீட்டின்படி, 2027 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் போரினால் பணவீக்கம் 0.5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் செலவுகள் அமெரிக்காவின் ஆயுத இருப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளன.

இது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிற மோதல்களை எதிர்கொள்ளும் நாட்டின் திறன் குறித்த கவலைகளை எழுப்புவதோடு, ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தின் மீதும் கூடுதல் சுமையைச் சுமத்துகிறது.

இதற்கான செலவு, 2026 ஜூலை 21 அன்று செனட் விசாரணையில் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்த 37.5 பில்லியன் டெடாலர் தொகைக்கு நெருக்கமாக இருந்தது.

இவற்றில் பெரும்பாலான செலவுகள் வெடிமருந்து மற்றும் ஆயுதங்களின் விரைவான பயன்பாட்டினால் ஏற்படுவதாக பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கையிருப்புகளை மீண்டும் நிரப்ப ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.

போரின்போது அமெரிக்கா தனது நீண்ட தூரத் துல்லிய ஏவுகணைகள் அனைத்தையும் “கிட்டத்தட்ட முழுமையாக” பயன்படுத்திவிட்டதாக ஆகஸ்ட் மாதத்தில் செய்திகள் தகவல் வெளியிட்டிருந்தன.

இதேவேளை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களையும், போர் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விமானங்களையும் ஈரான் சேதப்படுத்தியதாகவோ அல்லது அழித்ததாகவோ பென்டகனின் தலைமை ஆய்வாளர் இந்த வாரம் அறிக்கை அளித்துள்ளார்.

ஜூன் 19 வரையிலான போருக்கான செலவு 33.4 பில்லியன் டொலர்கள் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

இதில் ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கத் தூதரகக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சுமார் 184 மில்லியன் டொலர் மதிப்பிலான சேதமும் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை (போருக்கு முன்பு உலகின் சுமார் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெற்ற குறுகிய நீர்வழிப்பாதை) மற்றும் அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகச் சிக்கல்கள், நுகர்வோர் மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கான விலைகளை வெகுவாக உயர்த்தியுள்ளன.

போருக்கான செலவுகள் அதிகரித்து வருவது, ஏற்கனவே மோசமடைந்து வரும் அமெரிக்காவின் நிதி நிலையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மொத்த பொதுக் கடன் ஆகஸ்ட் மாதத்தில் 40 டிரில்லியன் டொர் அளவைக் கடந்தது.

2001 செப்டம்பர் 11,தாக்குதல்களைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்புகளுடன், ஈரான் போரை ட்ரம்ப் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசுகிறார்.

ஈராக்கில் எட்டு ஆண்டுகள் நடைபெற்ற அமெரிக்கப் போருக்கு (இதன் உச்சகட்டத்தின்போது 1,00,000-க்கும் மேற்பட்ட தரைப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்) 2 டிரில்லியன் டொலர் செலவானதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை கூறியுள்ளது.

அதேபோல், ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த அமெரிக்க மோதலுக்கு (இதன் தீவிரமான கட்டத்தில் 1,00,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்) 2.3 டிரில்லியன் டொலர் செலவானதாக பிரவுன் பல்கலைக்கழகத்தின் ‘காஸ்ட்ஸ் ஆஃப் வார்’ (Costs of War) திட்டம் தெரிவிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

30 0 0
உலக செய்திகள்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச்…

36 0 0
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக…

37 0 0
உலக செய்திகள்

நேரலையில் உலங்கு வானூர்தி விபத்து : மூவர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். லொஸ் ஏஞ்சலிஸ்…

55 0 0