உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
10 பார்வைகள்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இப்பகுதியில் அதிகரித்து வரும் யானைகளின் அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர்.

காட்டு யானைகளின் ஊடுருவலைக் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, பிரதேச சபையினால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட பாரிய போக்கஸ் விளக்குகள் (Focus Lights), யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் ஆபத்தான இடங்களில் பொருத்தப்பட்டன.

அத்துடன், காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் விசேட வனஜீவிகள் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதனிடையே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டு, எந்தவித பாதிப்புமின்றிப் பாதுகாப்பாக மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர்.

மனித – யானை மோதலைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இத்துரித நடவடிக்கை, அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0
இலங்கை செய்திகள்

வறுமையை ஒழிப்பதற்காக “பிரஜா சக்தி” திட்டம் உருவாக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட தென் கொரியாவின் மிக முக்கியமான அபிவிருத்தி இயக்கமான ‘செமாவூல் உந்தோங்’ (Saemaul Undong) பற்றிய…

45 0 0