நேரலையில் உலங்கு வானூர்தி விபத்து : மூவர் உயி@ரிழப்பு!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
லொஸ் ஏஞ்சலிஸ் நகரின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான காட்சிகளை NBC செய்தி நிறுவனம் உலங்கு வானூர்தி மூலம் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
இதன்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த உலங்கு வானூர்தி வீதியில் விழுந்து நொறுங்கியதுடன், தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை மூன்று உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு உடலம் வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஏனைய இரு உடலங்களும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களுடையதா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.