உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
30 பார்வைகள்

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி பலத்த காயமடைந்த இளைஞன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் அவர்களைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஆவார்.

முன்பகையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விரு கொலைச் சம்பவங்கள் தொடர்பாகவும் கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான வெற்றுக் கூச்சலே மொட்டுக் கட்சியின் பேரணி.!

“அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக, தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து…

41 0 0
இலங்கை செய்திகள்

சகல எதிர்க்கட்சிகளும் உரிய தருணத்தில் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும்.!

இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகச் செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான பிளவு அல்ல என்றும், , உரிய தருணத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்.!

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட…

42 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

37 0 0