உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

அரச திணைக்களங்களை ஒன்றிணைத்து மெனிக்பாம் கிராமத்தில் நடமாடும் சேவை!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
33 பார்வைகள்

உள்ளூராட்சி வாரத்தையொட்டி வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் ஏற்பாட்டில் மெனிக்பாம் கிராமத்தில் அரச திணைக்களங்களை ஒன்றினைத்து நடமாடும் சேவையொன்று நடாத்தப்பட்டது.

பிரதேசசபையின் தவிசாளர் தா.மு.இம்தியாஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறுபட்ட அரச திணைக்களங்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கியிருந்தனர்.

இந்த நடமாடும் சேவை நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

பிரதேசசபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன் பெருமளவிலான பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர். இதன்போது அப்பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

29 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

28 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

31 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

33 0 0