உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
28 பார்வைகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்குள் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தப் போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஆவார்.

சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மேல் நடவடிக்கைக்காக பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளது.

பொரளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

26 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

30 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

31 0 0
இலங்கை செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன்!

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் நிகழ்வு ஒன்றில் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு…

35 0 0